ADDED : ஆக 19, 2026 06:02 PM
அ நிறம் | அளவு
உளுந்தூர்பேட்டை, ஆக. 18–
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண வித்யாலயா குருகுலத்தில் தேசிய மாணவர் படையின் ஆய்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், 6வது படை பிரிவின் அதிகாரி கர்னல் சக்கரவர்த்தி கலந்து கொண்டு, தேசிய மாணவர் படை மாணவர்களுக்கும், குருகுல மாணவர்களுக்கும் தேசிய மாணவர் படையின் முக்கியத்துவம், நாட்டுப்பற்று, தேசிய மாணவர் படை சிறப்புகள் பற்றி கூறினார். தொடர்ந்து, அவர் குருகுல தேசிய மாணவர் படை மாணவர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கி ஊக்குவித்தார். இந்த நிகழ்ச்சியில் சுபேதார் சுரேஷ்குமார், பெண்கள் பிரிவு பொறுப்பாளர் ஸ்ரீ தேவசேனா உட்பட குருகுல முதல்வர், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.
