/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தேசிய மல்லர் கம்ப வீரர்களுக்கு விழுப்புரத்தில் வரவேற்பு
/
தேசிய மல்லர் கம்ப வீரர்களுக்கு விழுப்புரத்தில் வரவேற்பு
தேசிய மல்லர் கம்ப வீரர்களுக்கு விழுப்புரத்தில் வரவேற்பு
தேசிய மல்லர் கம்ப வீரர்களுக்கு விழுப்புரத்தில் வரவேற்பு
ADDED : டிச 15, 2024 11:01 PM

விழுப்புரம்; தேசிய மல்லர் கம்பம் விளையாட்டில் சாதனை படைத்து வந்த, 21 மாணவர்களுக்கு விழுப்புரம் ரயில் நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
மத்தியபிரதேச மாநிலம், உஜ்ஜைனில் கடந்த 9 முதல் 12ம் தேதி வரை நடந்த, 68வது பள்ளிகளுக்கு இடையேயான தேசிய விளையாட்டு போட்டியில், தனிநபர் மல்லர் கம்பம் போட்டி நடந்தது. இதில், விழுப்புரத்தைச் சேர்ந்த மணிதர்ஷன் வெள்ளி பதக்கம் வென்றார்,
மேலும், குழு மல்லர் கம்பம் போட்டியில் 14 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான பிரிவில் லோகேஸ்வரன், நந்தகுமார், பிரனீத், அகிலன் வெண்கலமும், 17 வயதிற்குட்பட்ட பிரிவில் திவாகர், யஷ்வந்த், தரணிதரன், மணிதர்ஷன் வெண்கலமும், 19 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான பிரிவில் பிரியதர்ஷன், சியாம், அருள்பாண்டி, அமர்தீஸ்வரனும், 14 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான பிரிவில் மதிவதனி, ரீனா, ஹரிஹாசினி, ரஷிகா வெண்கலமும் வென்றனர்.
மேலும், 19 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான போட்டியில் பவித்ரா, லியாஸ்ரீ,பிரகதி, தனுஷா வெள்ளி பதக்கம் என 21 பதக்கங்கள் வென்றனர்.
பதக்கம் பெற்ற விளையாட்டு வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள், சென்னையிலிருந்து சோழன் விரைவு ரயில் மூலம் நேற்று காலை விழுப்புரம் ரயில் நிலையம் வந்திறங்கினர்.
அவர்களை, தமிழ்நாடு மல்லர் கம்பம் கழக நிர்வாகிகள், பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் குழுவினர் மேள தாளத்துடன், சால்வை அணிவித்து வரவேற்றனர்.

