/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
நேமுர் மின்வாரிய அலுவலகம் இடமாற்றம்
/
நேமுர் மின்வாரிய அலுவலகம் இடமாற்றம்
ADDED : பிப் 23, 2024 12:04 AM
விழுப்புரம்: நேமுர் உதவி மின்பொறியாளர் அலுவலகம் இடம் மாற்றம் செய்யப்படுகிறது.
விழுப்புரம் மின்வாரிய செயற்பொறியாளர் சுரேஷ்குமார் செய்திக்குறிப்பு:
நேமுரில், செஞ்சி மெயின்ரோடு அரசலாபுரத்தில், நேமுர் மின் வாரிய உதவி பொறியாளர் அலுவலகம் இயங்கி வருகிறது. இனி, வரும் மார்ச் 1ம் தேதி முதல் நிர்வாக காரணங்களால், நேமுர் மின்வாரிய அலுவலகம், கஞ்சனுார் துணை மின் நிலைய வளாக கட்டடத்திற்கு இடம் மாற்றம் செய்யப்பட உள்ளது.
இதனால் நேமுர் உதவி மின் பொறியாளர் அலுவலகத்திற்குட்பட்ட மண்டகப்பட்டு, முட்டத்துார், வெங்காயகுப்பம், அரசலாபுரம், செ.குன்னத்துார், செ.புதுார், செ.கொளப்பாக்கம், தென்பேர், ஈச்சங்குப்பம், கல்யாணம்பூண்டி, மேல்காரணை, நந்திவாடி, நரசிங்கனுார், டி.புதுப்பாளையம், விஜயன்குப்பம் பகுதி மின் நுகர்வோர், விவசாயிகள், பொதுமக்கள், மின்துறை தொடர்பான சேவைகளுக்கு, புதிய மின்துறை அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.