/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வீடு புகுந்து மூதாட்டியிடம் நகை பறித்தவர்களுக்கு வலை
/
வீடு புகுந்து மூதாட்டியிடம் நகை பறித்தவர்களுக்கு வலை
வீடு புகுந்து மூதாட்டியிடம் நகை பறித்தவர்களுக்கு வலை
வீடு புகுந்து மூதாட்டியிடம் நகை பறித்தவர்களுக்கு வலை
ADDED : ஜூலை 08, 2025 11:15 PM
விக்கிரவாண்டி; விக்கிரவாண்டி அருகே வீடு புகுந்து மூதாட்டியை மயக்கமாக்கி, நகை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
விக்கிரவாண்டி அடுத்த முண்டியம்பாக்கம், ஏழை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சிவ பாக்கியம்,70: வீட்டில் தனிமையில் வசித்து வருகிறார்.
நேற்று அதிகாலை 5:30 மணிக்கு வாசலில் தண்ணீர் தெளித்து விட்டு உள்ளே நுழைந்த போது அவரது வீட்டில் மட்டும் மின்சாரம் இல்லை. பக்கத்து வீட்டில் வசிக்கும் கணேசனிடம் உதவி கேட்டார்.
அவர் வீட்டில் வந்து பார்த்த போது, மெயின் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. அவர் அதை போட்டு விட்டு அவருடைய வீட்டிற்கு சென்றார்.
தொடர்ந்து மூதாட்டி அவரது வீட்டிற்குள் சென்றார். அங்கு பதுங்கியிருந்த ஆண் மற்றும் பெண் ஆகிய இருவர் மூதாட்டியின் முகத்தில், மயக்க மருந்து கலந்த துணியை வைத்து அமுக்கினர்.
அவர் மயங்கிய பிறகு கம்மல், மூக்குத்தி ஆகியற்றை கழற்றினர். மூதாட்டியின் உடலில் ஒரு குடம் தண்ணீரை ஊற்றி விட்டு மாயமாகினர்.
காலை 8:00 மணிக்கு மயக்கம் தெளிந்து மூதாட்டி எழுந்து, கொசப்பாளையத்தில் வசிக்கும் மகள் வளர்மதிக்கு தகவல் தெரிவித்தார்.
அவர் வந்து மூதாட்டியை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தார். வளர்மதி புகாரின் பேரின், விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.