/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கலிங்கமலை கிராமத்தில் புதிய அங்கன்வாடி மையம் திறப்பு
/
கலிங்கமலை கிராமத்தில் புதிய அங்கன்வாடி மையம் திறப்பு
கலிங்கமலை கிராமத்தில் புதிய அங்கன்வாடி மையம் திறப்பு
கலிங்கமலை கிராமத்தில் புதிய அங்கன்வாடி மையம் திறப்பு
ADDED : மே 15, 2025 11:36 PM

கண்டமங்கலம்: கண்டமங்கலம் ஒன்றியம் கலிங்கமலையில் ரூ. 8 லட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மைய கட்டடத்தை ஜெகத்ரட்சகன் எம்.பி., லட்சுமணன் எம்.எல்.ஏ., ஆகியோர் நேற்று திறந்து வைத்தனர்.
கண்டமங்கலம் ஒன்றியம், பக்கிரிப்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட கலிங்கமலை கிராமத்தில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், ரூ.8 லட்சம் செலவில் கட்டப்பட்ட, புதிய அங்கன்வாடிமையம் திறப்பு விழா நேற்று நடந்தது.
விழாவிற்கு ஒன்றிய சேர்மன் வாசன் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமிமுருகன், துணை தலைவர் சரசு முன்னிலை வகித்தனர். வட்டார குழந்தை வளர்ச்சித்திட்ட அலுவலர் செல்வி மற்றும் ஊழியர்கள் வரவேற்றனர்.
அரக்கோணம் எம்.பி., ஜெகத்ரட்சகன், விழுப்புரம் எம்.எல்.ஏ., லட்சுமணன் ஆகியோர் அங்கன்வாடி மையக் கட்டடத்தை ரிப்பன்வெட்டி திறந்து வைத்து, குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து இனிப்பு வழங்கினர்.
விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ., புஷ்பராஜ், பி.டி.ஓ.,க்கள் சண்முகம், வெங்கடசுப்ரமணியம், ஒன்றிய தி.மு.க., செயலாளர் கணேசன், ஊராட்சி தலைவர்கள் மாலதிமகேந்திரன், மதியழகன், ஒன்றிய கவுன்சிலர் கலைராஜன், ஊராட்சி செயலர் ராஜாராம் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் அங்கன்வாடி ஊழியர் பழனியம்மாள் நன்றி கூறினார்.