/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
புதிய பஸ் நிலைய பணி : கலெக்டர் ஆய்வு
/
புதிய பஸ் நிலைய பணி : கலெக்டர் ஆய்வு
ADDED : செப் 30, 2025 12:03 AM

திண்டிவனம் : திண்டிவனத்தில் புதிய பஸ் நிலையப் பணிகள் 15 நாட்களுக்குள் முடிவடைந்து விடும் என கலெக்டர் தெரிவித்தார்.
திண்டிவனத்தில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் 27.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில், புதிய பஸ் நிலையம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. நேற்று பிற்பகல் 12:00 மணியளவில் கலெக்டர் ேஷக் அப்துல் ரஹ்மான் புதிய பஸ் நிலையத்தில் ஆய்வு செய்தார்.
அப்போது, சுகாதாரம், கழிவு நீர் வசதி உள்ளிட்வைகள் குறித்து, அதிகரிகளிடம் கேட்டறிந்தார்.
தொடர்ந்து, 6 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு வரும் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின், நிருபர்களிடம் கூறுகையில், 'பஸ் நிலையத்தில் பெரும்பாலான பணிகள் முடிந்து விட்டது. டிரான்ஸ்பார்மர், முகப்பு பகுதியில் தார் சாலை போடும் பணிகள் உள்ளிட்ட அனைத்தும் 15 நாட்களுக்குள் முடிந்துவிடும்.
மருத்துவமனையில் ஆப்பரேஷன் தியேட்டர் உள்ளிட்ட மருத்துவ சிகிச்சை உபகரணங்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் அனைத்தும் 20 நாட்களுக்குள் முடிந்துவிடும்' என்றார்.
ஆய்வின் போது, வேலுார் மண்டல நகராட்சி நிர்வாக இயக்குநர் நாராயணன், நகரமன்ற தலைவர் நிர்மலா ரவிச்ந்திரன், துணைத் தலைவர் ராஜலட்சமி வெற்றிவேல், கமிஷனர் சரவணன், மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் (பொறுப்பு) லதா, முதன்மை குடிமை மருத்துவர் முரளிஸ்ரீ, பொதுப் பணித்துறை செயற்பொறியாளர் கற்பகம், உதவி செயற்பொறியாளர் ஜெயபால் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.