/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
நீண்ட இழுபறிக்கு பிறகு புதிய பஸ் நிலையம் திறப்பு
/
நீண்ட இழுபறிக்கு பிறகு புதிய பஸ் நிலையம் திறப்பு
நீண்ட இழுபறிக்கு பிறகு புதிய பஸ் நிலையம் திறப்பு
நீண்ட இழுபறிக்கு பிறகு புதிய பஸ் நிலையம் திறப்பு
ADDED : பிப் 05, 2026 06:24 AM

திண்டிவனம்: திண்டிவனத்தில் ரூ.27.51 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய பஸ் நிலையம் திறக்கப்பட்டது.
திண்டிவனம் அருகே சிப்காட் வளாகத்தில் நேற்று காலை நடந்த அரசு விழாவில், தமிழக முதல்வர் ஸ்டாலின், நகராட்சி சார்பில் புதியதாக கட்டப்பட்டுள்ள பஸ் நிலையத்தை, காணொளி மூலம் திறந்து வைத்தார்.
தொடர்ந்து புதிய நிலையத்தில் நடந்த விழாவில், நகர்மன்ற தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன் தலைமையில், கமிஷனர் பானுமதி முன்னிலையில் குத்துவிளக்கேற்றி திறந்து வைக்கப்பட்டு, பொது மக்களுக்கு நகராட்சி சார்பில் இனிப்பு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் நகர்மன்ற துணை தலைவர் ராஜலட்சுமி வெற்றிவேல், கவுன்சிலர்கள் ரவிச்சந்திரன், பாபு, சின்னச்சாமி, பார்த்தீபன், ராம்குமார், அரும்புகுணசேகர், சத்தீஷ், ரேணுகா,பாஸ்கர், முத்துலட்சுமி, ேஹமமாலினி, தில்ஷாத்பேகம், புனிதா, லட்சுமிபிரபா,லதா சாரங்கபாணி, ரேகாநந்தகுமார், சுதாகர், மணிகண்டன், ரம்யா உள்ளிட்ட கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
நகராட்சி சார்பில் பொறியாளர் புவனேஸ்வரி மேலாளர் நெடுமாறன், உதவி வருவாய் அலுவலர் அசோக் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பின்னர் புதிய பஸ் நிலையத்திற்கு வந்திருந்த மகளிருக்கான அரசு பஸ்சில், நகர்மன்ற தலைவர், கமிஷனர், கவுன்சிலர்கள் அனைவரும் பயணம் செய்தனர்.

