/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
புதிய மின் விளக்குகள் : டி.எஸ்.பி., இயக்கி வைப்பு
/
புதிய மின் விளக்குகள் : டி.எஸ்.பி., இயக்கி வைப்பு
ADDED : ஏப் 12, 2025 09:58 PM

வானுார் : ஆரோவில் காவல் நிலையம் முதல் மொரட்டாண்டி டோல்கேட் வரை 2.10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட புதிய மின் விளக்குகளை டி.எஸ்.பி., இயக்கி வைத்தார்.
திருச்சிற்றம்பலம் ஊராட்சிக்குட்பட்ட ஆரோவில் காவல் நிலையம் எதிரில் இருந்து மொரட்டாண்டி டோல்கேட் சந்திப்பு வரை ஊராட்சியில் நிதியில் 2 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில், 22 மின் கம்பங்கள் அமைத்து 30 மின் விளக்குகள் அமைக்கப்பட்டது.
இந்த மின் விளக்குகளை இயக்கி வைக்கும் நிகழ்ச்சிக்கு ஊராட்சி தலைவர் வெங்கேடசன் தலைமை தாங்கினார். ஆரோவில் இஸ்பெக்டர் கமலஹாசன் முன்னிலை வகித்தார். கோட்டக்குப்பம் உட்கோட்ட டி.எஸ்.பி., உமாதேவி புதிய மின் விளக்குகளை இயக்கி வைத்தார். ஆரோவில் போலீசார், ஊராட்சி முக்கியஸ்தர்கள் பங்கேற்றனர்.

