ADDED : ஏப் 12, 2025 10:00 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுாரில் நுாலக கட்டடம் திறப்பு விழா நடந்தது.
திருவெண்ணெய்நல்லுார் பேரூராட்சிக்குட்பட்ட 10வது வார்டு பகுதியில் மூலதன மானிய திட்டத்தின் கீழ் 22 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நுாலகம் கட்டப்பட்டது. முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக கட்டடத்தை திறந்து வைத்தார். நுாலகத்தில் நடந்த விழாவிற்கு, வார்டு கவுன்சிலர் ரகு தலைமை தாங்கினார். துணைச் சேர்மன் ஜோதி, இளநிலை உதவியாளர் பாலமுருகன் முன்னிலை வகித்தனர்.
பேரூராட்சி சேர்மன் அஞ்சுகம் கணேசன் குத்து விளக்கேற்றி வைத்தார். மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் விஜயபாபு, கவுன்சிலர்கள் செந்தில் முருகன், ஷாஜகான், சதாம், அரங்கராஜன், ஜோதி, அறிவழகன், சக்திவேல் மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

