/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ரூ.3 கோடியில் புதிய மார்க்கெட் கமிட்டி போதிய வசதியின்றி விவசாயிகள் அவதி
/
ரூ.3 கோடியில் புதிய மார்க்கெட் கமிட்டி போதிய வசதியின்றி விவசாயிகள் அவதி
ரூ.3 கோடியில் புதிய மார்க்கெட் கமிட்டி போதிய வசதியின்றி விவசாயிகள் அவதி
ரூ.3 கோடியில் புதிய மார்க்கெட் கமிட்டி போதிய வசதியின்றி விவசாயிகள் அவதி
ADDED : ஜன 13, 2026 06:12 AM

திருவெண்ணெய்நல்லுார் மார்க்கெட் கமிட்டி கடந்த 1975ம் ஆண்டு பேரூராட்சிக்கு சொந்தமான ெஷட்களில் தற்காலிகமாக வாடகை இடத்தில் துவங்கியது. இங்கு அறுவடை காலங்களில் நெல் வரத்து அதிகரிப்பின் போது விவசாயிகள் நெல் மூட்டைகளை அப்பகுதியில் சாலைகளில் அடிக்கி வைத்தனர்.
இதன்காரணமாக வாகன ஓட்டிகள் அவ்வழியாக கடந்து செல்ல சிரமாக உள்ளது என சாலையில் நெல்களை கொட்ட எதிர்ப்பு தெரிவித்தனர். இதுமட்டுமல்லாமல் மழைக்காலங்களில் மூட்டைகள் நனைந்து நஷ்டமடைவதும், சாலையில் கொட்டி வைக்கப்படும் நெல் மணிகளை ஆடு, மாடுகள் சேதப்படுத்துவது போன்ற பாதுகாப்பற்ற சூழல் இருந்து வந்தது.
போதிய இடவசதி இல்லாததால் மார்க்கெட் கமிட்டியை வேறு இடத்திற்கு மாற்றி அமைக்ககோரி திருவெண்ணெய்நல்லுார் பகுதி விவசாய சங்கத்தினர் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர் .
நீண்ட கால கோரிக்கையைத் தொடர்ந்து, சின்னசெவலை கிராமத்தில் உள்ள கிருபாபுரீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் கட்டப்பட்டு கடந்த ஆண்டு திறக்கப்பட்டது.
ஆனால், 500 மெட்ரிக் டன் அளவில் மட்டுமே சேமிப்பு கிடங்கு கட்டப்பட்டாதால் விவசாயிகள் கொண்டு வரும் நெல்களை திறந்த வெளியில் சாக்கு போட்டு கொட்டும் நிலை உள்ளது.
பழைய மார்க்கெட் கமிட்டியில் எந்த மாதிரியான இன்னல்களை விவசாயிகள் அனுபவித்தார்களோ அதே போல் எவ்வித மாற்றமும் இல்லாமல் இடம் பற்றாக்குறையால் இங்கும் இன்னல்களை அனுபவித்து வருகின்றனர்.
நேற்று அதிகாலை திடீரென பெய்த மழையால் கமிட்டியில் கொட்டியிருந்த நெல் நனைந்தது.
எனவே விவசாயிகள் நலன்கருதி மார்கெட் கமிட்டியில் விவசாயிகள் கொண்டு வரும் நெல்களை பாதுகாப்பாக வைக்க மேற்கூரைகள் அமைத்தும், சுற்று சுவர் கட்டி தரவேண்டும் எனவும் விவசாயிகள் மற்றும் விவசாய சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

