/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தேர்தலையொட்டி புதிய சாலை பணி தீவிரம்! விழுப்புரத்தில் ரூ.26 கோடியில் துரிதம்
/
தேர்தலையொட்டி புதிய சாலை பணி தீவிரம்! விழுப்புரத்தில் ரூ.26 கோடியில் துரிதம்
தேர்தலையொட்டி புதிய சாலை பணி தீவிரம்! விழுப்புரத்தில் ரூ.26 கோடியில் துரிதம்
தேர்தலையொட்டி புதிய சாலை பணி தீவிரம்! விழுப்புரத்தில் ரூ.26 கோடியில் துரிதம்
UPDATED : மார் 03, 2026 08:08 AM
ADDED : மார் 03, 2026 06:21 AM

விழுப்புரம் நகரில் தேர்தல் நெருங்குவதையொட்டி, நீண்டகால கோரிக்கையாக உள்ள சாலைப் பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டத்தில், சட்டசபை தேர்தல் நெருங்குவதையொட்டி, பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விரைவில் தேர்தல் அறிவிப்பு வெளியாக உள்ளதால், முடிக்கப்பட்டுள்ள பல்வேறு அரசு கட்டடங்கள், திட்டப்பணிகள் விரைந்து முடித்து, திறந்து வைத்து வருகின்றனர்.
இதே போல், விழுப்புரம் நகரிலும் திட்டப் பணிகள் வேகமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக, விழுப்புரம் நகரில் பாதாள சாக்கடை திட்டத்திற்காக, விரிவாக்கம் செய்யப்பட்ட நகராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நடந்து வருகிறது. இதற்காக சாலைகள் உடைபட்டு, பல இடங்களில் குடியிருப்பு பகுதி சாலைகள் சேதமாகி கிடக்கிறது. அதனை புதுப்பித்து தர வேண்டும் என்று மக்கள் ஓராண்டு காலமாக கோரிக்கை வைத்து வந்தனர்.
இதனால், பாதாள சாக்கடை முடிந்த இடங்களில், புதிய சாலை போடுவதற்காக, லட்சுமணன் எம்.எல்.ஏ., தனது தொகுதி மேம்பாட்டு நிதியை 26 கோடி ரூபாயை ஒதுக்கி, பணிகளை விரைந்து மேற்கொள்ள உத்தரவிட்டிருந்தார்.
அந்த வகையில் விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நகராட்சி சார்பில், தமிழ்நாடு நகர்புற சாலை மேம்பாட்டு திட்டம், மாநில நிதிக்குழு திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களின் கீழ் 26.12 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 227 தார்சாலைகள் அமைக்கும் பணிகள் துரிதமாக நடந்து வருகிறது.
விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட பாணாம்பட்டு - ஆனங்கூர் சாலை, ராகவன்பேட்டை சாலை, கீழ்ப்பெரும்பாக்கம், இந்திரா நகர், காகுப்பம் பகுதி குடியிருப்பு சாலைகள், எருமனந்தால்கல் மெயின் தார் சாலை, கலைஞர் நகர் மெயின் தார் சாலை மற்றும் சாலாமேடு, வழுதரெட்டி, பாணாம்பட்டு, காகுப்பம், தந்தை பெரியார் நகர் உள்ளிட்ட இடங்களில் புதிய தார் சாலைகள்போடும் பணிகள் நடந்து வருகிறது.
இதில், 100க்கும் மேற்பட்ட இடங்களில் தார் சாலை பணிகள் முடிந்து பொது மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடப்பட்டுள்ளது. தொடர்ந்து, அனைத்து இடங்களிலும் பணிகள் தொடங்கி தீவிரமாக நடந்து வருகிறது.

