/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அ.தி.மு.க.,வினருக்கு புதிய சட்டை அறிமுகம்
/
அ.தி.மு.க.,வினருக்கு புதிய சட்டை அறிமுகம்
ADDED : ஜூலை 12, 2025 03:49 AM

வானுார்: அ.தி.மு.க.,நிர்வாகிகளுக்கு, புதிய சட்டையை மாவட்ட செயலாளர் சண்முகம் அறிமுகப்படுத்தி வைத்தார்.
அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி, தமிழகம் முழுவதும் 'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' பிரசார பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று வானுார் தொகுதிக்குட்பட்ட திருச்சிற்றம்பலம் கூட்டு சாலையில் அவர் பிரசாரம் மேற்கொண்டார்.
இதையொட்டி, திண்டிவனத்தில், இரும்பை அ.தி.மு.க., கிளை செயலாளர் வேல்முருகன் ஏற்பாட்டின் படி, நிர்வாகிகளுக்கு மாவட்ட செயலாளர் சண்முகம், புதிய சட்டையை அறிமுகப்படுத்தி வைத்தார். தொடர்ந்து நிர்வாகிகளுக்கு புதிய சட்டை வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியின் போது, அ.தி.மு.க., நிர்வாகிகள் செல்லப்பெருமாள், குணசேகரன், ஜெகன்நாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

