/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
துருவை கிராமத்தில் புதிய தார் சாலை பணி
/
துருவை கிராமத்தில் புதிய தார் சாலை பணி
ADDED : ஜூன் 12, 2025 10:47 PM

வானுார்; துருவை கிராமத்தில் ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய தார் சாலை பணி துவங்கியது.
வானுார் அடுத்த துருவை கிராமத்தில் இருந்து அச்சரம்பட்டு வழியாக திருச்சிற்றம்பலம் கூட்ரோடு, வானுார் பகுதிக்குச் செல்லும் பிரதான சாலை உள்ளது. இந்த சாலை குண்டும் குழியுமாக இருந்ததால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வந்தனர். சாலையை புதுப்பிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.
இதையெடுத்து முதல்வரின் கிராம சாலை விரிவாக்கத் திட்டத்தின் கீழ் 1.800 கி.மீ., துாரத்திற்கு ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய தார் சாலைக்கான பூமி பூஜை நேற்று நடந்தது.
நிகழ்ச்சியில், ஒன்றிய சேர்மன் உஷா முரளி தலைமை தாங்கி, பணியை துவக்கி வைத்தார்.
ஒன்றிய பொறியாளர் குகன், தி.மு.க., ஒன்றிய செயலாளர் முரளி, ஊராட்சி தலைவர் அன்பழகி மணிபாலன், முன்னாள் ஊராட்சி தலைவர் முத்துவேல், ஒன்றிய கவுன்சிலர் பிரகாஷ், மாவட்ட பிரதிநிதி பாலு, ஒன்றிய துணைச் செயலாளர் முத்தமிழ், கிளைச் செயலாளர் கேசவன், வானுார் ஒன்றிய வி.சி., செயலாளர் கலைமாறன் மற்றும் பலர் பங்கேற்றனர்.