/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ராயப்புதுப்பாக்கம் கிராமத்தில் ரூ. 77 லட்சத்தில் புதிய தார்சாலை
/
ராயப்புதுப்பாக்கம் கிராமத்தில் ரூ. 77 லட்சத்தில் புதிய தார்சாலை
ராயப்புதுப்பாக்கம் கிராமத்தில் ரூ. 77 லட்சத்தில் புதிய தார்சாலை
ராயப்புதுப்பாக்கம் கிராமத்தில் ரூ. 77 லட்சத்தில் புதிய தார்சாலை
ADDED : ஜூன் 25, 2025 01:06 AM

வானுார் : ராயப்புதுப்பாக்கம் கிராமத்தில் ரூ. 77 லட்சம் மதிப்பில் புதிய தார் சாலை அமைக்கும் பணியை ஒன்றிய சேர்மன் துவக்கி வைத்தார்.
வானுார் அடுத்த ராயப்புதுப்பாக்கம் கிராமத்தில் பிரதான சாலை குண்டும் குழியுமாக காட்சி அளித்து வந்தது. இந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர். புதிய சாலை அமைத்து தரக்கோரி அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்தது.
இதைத் தொடர்ந்து, ராயப்புதுப்பாக்கத்தில் முதல்வரின் கிராம சாலை திட்டத்தின் கீழ், ரூ. 77 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பில், ஒரு கிலோ மீட்டர் 180 மீட்டர் துாரத்திற்கு தார் சாலை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
சாலை பணி துவக்க விழா நடந்தது. ஒன்றிய சேர்மன் உஷா முரளி, பூமி பூஜை செய்து பணியை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், தி.மு.க., ஒன்றிய செயலாளர் முரளி, பி.டி.ஓ., மணிவண்ணன், உதவி பொறியாளர் குகன், மாவட்ட பிரதிநிதி பாலு, ஒப்பந்ததாரர் வினோத்குமார், மகளிர் அணி செயலாளர் அனு, கிளை செயலாளர்கள் மகேஷ், ஞானவேல், புஷ்பநாதன், முன்னாள் ஊராட்சி தலைவர் ஜெயபால், உள்ளாட்சி பிரதிநிதி சதிஷ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.