/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கூட்டுறவு சங்கங்களுக்கு புதிய லாரிகள்
/
கூட்டுறவு சங்கங்களுக்கு புதிய லாரிகள்
ADDED : ஜன 09, 2024 01:18 AM

செஞ்சி : செஞ்சி பகுதியில் உள்ள 5 கூட்டுறவு சங்கங்களுக்கு பொருட்கள் சப்ளை செய்ய வாங்கிய புதிய லாரிகளை அமைச்சர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
செஞ்சி பகுதியில் உள்ள கோணை, கணக்கன்குப்பம், உண்ணாமனந்தல், மொடையூர், பென்னகர் ஆகிய தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் கீழ் இயங்கும் ரேஷன் கடைகளுக்கு பொருட்களை சப்ளை செய்ய 1 கோடியே 16 லட்சம் ரூபாய் மதிப்பில் 5 லாரிகளை வாங்கப்பட்டுள்ளது.
இந்த லாரிகளை அமைச்சர் மஸ்தான் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியின் போது ஒன்றிய சேர்மன் விஜயகுமார், பேரூராட்சி சேர்மன் மொக்தியார், கூட்டுறவு சங்க மண்டல இணைப்பதிவாளர் யசோதா தேவி, சங்க செயலாளர்கள் பழனி, கலைச்செல்வன், சிவக்குமார், மாவட்ட கவுன்சிலர் அரங்க ஏழுமலை, துணைச் செயலாளர் திருநாவுக்கரசு, எழுத்தர் அண்ணாதுரை மற்றும் தி.மு.க., நிர்வாகிகள் உடனிருந்தனர்.