/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
நகை மதிப்பீட்டாளர் பயிற்சி துவக்கம்
/
நகை மதிப்பீட்டாளர் பயிற்சி துவக்கம்
ADDED : அக் 17, 2010 02:19 AM
விழுப்புரம் : விழுப்புரம் கூட்டுறவு மேலாண்மை நிலையத் தில் நகை மதிப்பீட் டாளர் பயிற்சிக்கு விண் ணப் பங்கள் வரவேற்கப்படுகிறது.
இது குறித்து கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் மலர்விழி விடுத்துள்ள செய்திக் குறிப்பு: விழுப்புரம் கூட்டுறவு மேலாண்மை நிலையத் தில் தற்போது விடுமுறை தினங்களில் தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சியளிக்கப்படுகிறது. இந்த பயிற்சி திங்கள் முதல் வெள்ளி வரை வேலை நாட்களில் நடக்கிறது. இதற்கான பயிற்சிக் கட் டணம் 2680 ரூபாயாகும். பத்தாம் வகுப்பு முடித்த 18 வயதிற்கு மேற்பட்ட ஆண், பெண்கள் விண்ணப்பிக்கலாம். நகை மதிப்பீடும் அதன் நுட்பங்களும், பயிற்சியில் அடிப்படை உலோகவியல், உலோகத்தின் பயன் பாடு, தங்கத்தை பற்றிய அடிப்படை விபரம், விலை, கணக்கிடும் முறை, உருக்கி தரம் அறிதல், சுத்த தங்கம் கணக்கிடுதல், வங் கிகளில் நகைக் கடன் வழங் கும் முறை, ஹால்மார்க், அடகு பிடித்தல் குறித்து பயிற்சியளிக்கப்படுகிறது. பயிற்சியின் முடிவில் செய்முறை, எழுத்துத் தேர் வுகள் நடத்தி தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் சான்றிதழ்கள் வழங்கப்படும். வேலை வாய்ப்பு அலு வலகத்தில் பதிவு செய் தும், அரசு மற்றும் தனியார் வங்கிகளில் வேலை வாய்ப் புகளை பெற முடியும். விண்ணப்பங்கள் கூட்டுறவு வேளாண்மை நிலையம், எல்லிஸ்சத்திரம் சாலை, விழுப்புரம் என்ற முகவரியில் கிடைக்கும். தகவல் பெற 04146 259467 என்ற தொலைபேசி எண் ணில் தொடர்புகொள்ள லாம். இவ்வாறு இணைப் பதிவாளர் மலர்விழி தெரிவித்துள்ளார்.