/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
நிமலய்யன் சுவாமி மகரஜோதி தரிசனம்
/
நிமலய்யன் சுவாமி மகரஜோதி தரிசனம்
ADDED : ஜன 18, 2024 04:23 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: பானாம்பட்டு பகுதியில் உள்ள நிமலய்யன் சன்னதியில் மகரஜோதி தரிசனம் நிகழ்ச்சி நடந்தது.
விழுப்புரம் அருகே பானாம்பட்டு பகுதியில் நிமலய்யன் சந்நதி உள்ளது. இங்கு, மகரஜோதி தரிசனத்தை யொட்டி, நேற்று முன்தினம் காலை 7.00 மணிக்கு நிமலய்யன் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. தொடர்ந்து 8.00 மணிக்கு தீபாராதனையும், மாலை 5.00 மணிக்கு மகரஜோதி தரிசனத்தில் நிமலய்யன் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடந்தது. பின், ஐயப்ப பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.