/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
நிராமயா மருத்துவ காப்பீடு துளிர் சிறப்பு பள்ளியில் அமல்
/
நிராமயா மருத்துவ காப்பீடு துளிர் சிறப்பு பள்ளியில் அமல்
நிராமயா மருத்துவ காப்பீடு துளிர் சிறப்பு பள்ளியில் அமல்
நிராமயா மருத்துவ காப்பீடு துளிர் சிறப்பு பள்ளியில் அமல்
ADDED : ஏப் 07, 2025 06:37 AM

விக்கிரவாண்டி; விக்கிரவாண்டி அடுத்த பனையபுரம் துளிர் சிறப்பு பள்ளியில், சிருஷ்டி பவுண்டேஷன் சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கான மத்திய அரசின் நிராமயா மருத்துவ காப்பீடு திட்டம் நடைமுறை படுத்தும் விழா நடந்தது.
நிராமயா மருத்துவ காப்பீடு திட்டம், மாற்றுத்திறனாளிகளுக்காக தேசிய நலவாழ்வு அறக்கட்டளையால் செயல்படுத்தப்படும் திட்டம். இத்திட்டம் மூலம் ஆட்டிசம், மூளை முடக்குவாதம் உள்ளிட்ட குறைபாடு உள்ளவர்களுக்கு மருத்துவ காப்பீடு வழங்குகிறது.
பனையபுரம் துளிர் சிறப்பு பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு, பள்ளி நிறுவனர் வடிவேல் தலைமை தாங்கினார். தாளாளர் தனலட்சுமி வடிவேல் முன்னிலை வகித்தார். மாற்றுத்திறனாளி மாணவர் பெற்றோர் கல்பனா வரவேற்றார்.
தேசிய அறக்கட்டளை பிரதிநிதி தமிழ்ச்செல்வன் மாற்றுத் திறனாளிகளுக்கு நிராமயா காப்பீட்டு திட்ட பயன்கள் குறித்து விளக்கினார்.
பெற்றோர் சங்கத் தலைவர் கோமளா, சிறப்பு ஆசிரியர் முத்துகிருஷ்ணன், ஆசிரியை ஜெயப்பிரதா, மாற்றுத்திறனாளிகளின் பெற்றோர்கள் பங்கேற்றனர்.

