/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
நிராமய திட்ட மருத்துவ வாகனம் துவக்க விழா
/
நிராமய திட்ட மருத்துவ வாகனம் துவக்க விழா
ADDED : நவ 24, 2024 04:59 AM

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி டோல் கேட்டில் டிரைவர்களுக்கான நடமாடும் மருத்துவ வாகனம் துவக்க விழா நடந்தது.
விழாவிற்கு, டி.எஸ்.பி., நந்தகுமார் தலைமை தாங்கி நடமாடும் மருத்துவ வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்து பேசினார். துணை மேலாளர் சொர்ணமணி வரவேற்றார். நடமாடும் மருத்துவகுழு டாக்டர் சதீஷ் தலைமையிலான மருத்துவ குழுவினர் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டார்.
விழுப்புரம் நகாய் தலைமை ஒருங்கிணைப்பு அலுவலர் கார்த்திகேயன், திட்ட மேலாளர் சதீஷ்குமார், அப்போலோ மருத்துவமனை உதவி பொது மேலாளர் டேனியல் திம்மையா, ஒருங்கிணைப்பாளர் பிரவீன்குமார், பிரிட்ஜ் இன்ஜினியர் மினி ஆராதனா, நிலைய பொறியாளர் ரமேஷ், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் வசந்த், டோல் கேட் மேலாளர்கள், ஊழியர்கள் பங்கேற்றனர். டோல் கேட் பிஆர்.ஓ., தண்டபாணி நன்றி கூறினார்.