/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மேல்பாதி திரவுபதியம்மன் கோவில் திறந்தும் 2வது நாளாக பக்தர்கள் யாரும் செல்லவில்லை

ADDED : ஏப் 20, 2025 03:18 AM
விழுப்புரம்: மேல்பாதி திரவுபதியம்மன் கோவில் திறந்தும், நேற்று இரண்டாவது நாளாக பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய செல்லவில்லை.
விழுப்புரம் அருகே மேல்பாதி தர்மராஜா திரவுபதியம்மன் கோவில், இரு சமூக மக்களிடையே ஏற்பட்ட தகராறால், 2023ல் பூட்டி 'சீல்' வைக்கப்பட்டது.
பொதுமக்கள் செல்ல தடை உத்தரவு போடப்பட்டது. உயர் நீதிமன்ற உத்தரவில், 2024 மார்ச்சில் கோவில் திறக்கப்பட்டு, தனி அர்ச்சகர் வாயிலாக ஒரு கால பூஜை நடந்தது.
உயர்நீதிமன்ற உத்தரவில் கடந்த 17ம் தேதி, 145 தடை உத்தரவு ரத்து செய்து, அனைத்து சமுதாயத்தினரும் வழிபட கோவில் திறக்கப்பட்டது.
அன்று கோவிலை நிர்வகித்து வந்த தரப்பினர் கோவிலுக்குள் செல்லவில்லை. மற்றொரு தரப்பினர் கோவிலுக்குள் சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.
நேற்று முன்தினம் கோவில் திறந்தபோது, இருதரப்பிலும் யாரும் சுவாமி தரிசனம் செய்ய செல்லவில்லை.
நேற்று, இரண்டாவது நாளாக இருதரப்பு பொதுமக்கள் யாரும் கோவிலுக்குள் செல்லவில்லை. வழக்கம்போல் கோவில் திறக்கப்பட்டு, காலையில் பூஜை முடிந்து, மீண்டும் மூடப்பட்டது. நுாற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.