sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

 நியமன உறுப்பினர்களுக்கு பிரதிநிதித்துவம் இல்லை மாற்றுத்திறனாளிகள் அதிருப்தி

/

 நியமன உறுப்பினர்களுக்கு பிரதிநிதித்துவம் இல்லை மாற்றுத்திறனாளிகள் அதிருப்தி

 நியமன உறுப்பினர்களுக்கு பிரதிநிதித்துவம் இல்லை மாற்றுத்திறனாளிகள் அதிருப்தி

 நியமன உறுப்பினர்களுக்கு பிரதிநிதித்துவம் இல்லை மாற்றுத்திறனாளிகள் அதிருப்தி


ADDED : மார் 10, 2026 04:45 AM

Google News

ADDED : மார் 10, 2026 04:45 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: உள்ளாட்சி நியமன உறுப்பினர்களுக்கு உரிய பிரதிநிதித்துவமும் மதிப்பூதியம் போன்ற சலுகையும் வழங்கவில்லை என மாற்றுத்திறனாளிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளாட்சி உறுப்பினர் பதவிகளில் தலா ஒரு நியமன பதவிகள் என மாற்றுத் திறனாளிகள் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நியமன உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.

இதற்காக தமிழக அரசு பிறப்பித்த அரசாணையில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு வழங்கப்படும் அனைத்து சலுகைகளும், வாய்ப்புகளும் நியமன உறுப்பினர்களுக்கும் வழங்கப்படும் என குறிப்பிட்டிருந்தது.

இந்நிலையில், நியமன பதவிகளில் அமர்த்தப்பட்டவர்களில் பலருக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கவில்லை. அரசு குறிப்பிட்ட சலுகையும், முக்கியத்துவமும் அளிக்கவில்லை என்ற அதிருப்தி எழுந்துள்ளது.

இது குறித்து, விழுப்புரம் மாவட்ட புதிய அலை மாற்றுத் திறனாளிகள் கூட்டமைப்பினர், அதன் தலைவர் அண்ணாமலை, மாவட்ட செயலாளர் தமிழரசி, துணைத் தலைவர் பாஸ்கர் தலைமையில், 20 நியமன உறுப்பினர்கள், நேற்று விழுப்புரம் கலெக்டரை சந்தித்து கோரிக்கை மனு அளித்து, அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

இது குறித்து, அவர்கள் கூறுகையில், 'மாற்றுத்திறனாளிகள் பிரச்னைகளுக்கு, குரல் கொடுப்பதற்காகவே உள்ளாட்சியில் நியமன பதவி வழங்கப்பட்டது. 4 மாதங்கள் ஆகியும், நியமன உறுப்பினர்களுக்கான அங்கீகாரத்தை, சில உள்ளாட்சி அமைப்புகளில் வழங்காத நிலை உள்ளது.

மதிப்பூதியம் 4 மாதங்களாக வழங்கவில்லை. கூட்டங்களுக்கான சிட்டிங் படி கூட பல நியமன உறுப்பினர்களுக்கு வழங்கவில்லை. கூட்டத்திற்கு அழைப்பு கூட விடுப்பதில்லை. மாவட்ட கவுன்சில், நகராட்சி கவுன்சிலில் மட்டும் நியமன உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு, மன்ற கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர்.

ஆனால், பிற உறுப்பினர்களை போல், நியமன உறுப்பினர்களிடம் கருத்து கேட்பதில், பிரதிநிதித்துவம் வழங்குவதில் தயக்கம் உள்ளது. இதனால், அரசு இதில் உரிய கவனம் செலுத்த வேண்டும்' என்றனர்.






      Dinamalar
      Follow us