/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சர்வீஸ் சாலையில் வேகத்தடை இல்லை: மாணவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் மாணவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம்

ADDED : அக் 16, 2024 06:54 AM

செஞ்சி : செஞ்சியில் புதிதாக போடப்பட்டுள்ள சர்வீஸ் சாலையில் வேகத்தடை இல்லாததால் பள்ளி மாணவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சென்னை, புதுச்சேரி மார்க்கத்தில் இருந்து திருவண்ணாமலை, பெங்களூரு செல்லும் வாகனங்கள் செஞ்சி நகரைக் கடக்க செல்ல புறவழிச்சாலை உள்ளது.
இந்த புழவழிச்சாலையில் 50க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குச் செல்லும் மேல்களவாய் சாலையில் பாலத்தின் கீழ் வருவதற்கு சர்வீஸ் சாலை அமைக்காமல் மண் சாலையாக விட்டு வைத்திருந்தனர். இதனால் பொது மக்களும், மாணவர்களும் கடும் அவதிப்பட்டு வந்தனர்.
கடந்த மாதம் இது குறித்த செய்தி 'தினமலர்' நாளிதழில் வெளியானது. அடுத்த சில தினங்களில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தினர் தார் சாலை அமைத்தனர். இதன் பிறகு இந்த வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
இங்குள்ள மூன்று தனியார் பள்ளிகளில் படிக்கும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் வெளியூர்களுக்கும், செஞ்சியின் இதர பகுதிக்கும் இந்த சாலை வழியாக சென்று வருகின்றனர்.
புதிதாக போடப்பட்டுள்ள சர்வீஸ் சாலை சரிவாக இருப்பதால் இதில் வாகனங்கள் அதி வேகமாக வந்து மேல்களவாய் சாலையில் நுழைகின்றன. இங்கு வேகத்தடை இல்லாததால் சாலையில் கடந்து செல்லும் மாணவர்கள் மீது அடிக்கடி மோதி விபத்துகள் ஏற்படுகிறது.
விபத்துகளைத் தவிர்க்க சர்வீஸ் சாலையில் வேகத்தடை அமைக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.