/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு ஆலோசனை கூட்டம்
/
வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு ஆலோசனை கூட்டம்
ADDED : அக் 13, 2025 12:39 AM
செஞ்சி; செஞ்சி ஒன்றியத்தை சேர்ந்த ஊராட்சி தலைவர்கள், செயலாளர்களுக்கு வட கிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது.
ஒன்றிய சேர்மன் விஜயகுமார் தலைமை தாங்கினார். ஏ.பி.டி.ஓ., சவுந்தர பாண்டியன் வரவேற்றார்.
பி.டி.ஓ.,க்கள் நடராஜன், பிரபா சங்கர் ஆகியோர் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கி பேசினர்.
இதில் பருவமழைக்கு முன்பு மழைநீர் வடிகால் பகுதிகளை சீரமைக்கவும், சிறு பாலங்களில் அடைப்புகளை அகற்றி பராமரிக்கவும் வலியுறுத்தப்பட்டது.
மேல்நிலை குடிநீர் தொட்டிகளை சுத்தம் செய்து குளோரின் கலந்த குடிநீர் வினியோகம் செய்தல், குடியிருப்புகளில் மழை நீர் தேங்காமல் கண்காணித்தல் மற்றும் ஏரி, குளங்களில் உடைப்பு ஏற்பட்டால் சரி செய்ய தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டது. இதில் ஊராட்சி தலைவர்கள் சங்க தலைவர் ரவி, செயலாளர் அய்யனார், பொருளாளர் ராஜேந்திரன், துணை பி.டி.ஓ., க்கள் ஏழுமலை, அபிராமி மற்றும் ஊராட்சி தலைவர்கள், செயலாளர்கள் கலந்து கொண்டனர். துணை பி.டி.ஓ., சசிகலா நன்றி கூறினார் .