/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வடகிழக்கு பருவ மழை ஆய்வுக் கூட்டம்
/
வடகிழக்கு பருவ மழை ஆய்வுக் கூட்டம்
ADDED : அக் 18, 2024 07:20 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவலுார்பேட்டை: மேல்மலையனுாரில் வட கிழக்கு பருவ மழை முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடந்தது.
தாலுகா அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, துணை ஆட்சியர் (சிப்காட் ) விஜயா தலைமை தாங்கி அதிகாரிகளிடம் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னேற்பாடுகளையும், செயல்திட்டங்களையும் கேட்டறிந்தார். தாசில்தார் தனலட்சுமி முன்னிலை வகித்தார்.
இதில் வருவாய், காவல், தீயணைப்பு, ஊரக வளர்ச்சி, பொதுப்பணி, மின்சாரம், சுகாதாரம், நெடுஞ்சாலை, வேளாண், தோட்டக்கலை உள்ளிட்ட துறைகளை சேர்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.