/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மாடியில் இருந்து விழுந்த வடமாநில தொழிலாளி பலி
/
மாடியில் இருந்து விழுந்த வடமாநில தொழிலாளி பலி
ADDED : ஆக 11, 2025 11:03 PM
வானுார்: கோட்டக்குப்பம் அருகே மாடியில் இருந்து தவறி விழுந்த வடமாநில தொழிலாளி இறந்தார்.
கோட்டக்குப்பம், சின்ன முதலியார்சாவடியில் 4 மாடிகள் கொண்ட புதிய வணிக வளாக கட்டுமானப் பணி நடந்து வருகிறது. வட மாநில தொழிலாளர்கள் தங்கி கட்டட பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு, ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஜோதி தாகூர், மங்களூரு மாஜி, டம்பாரு மாஜி ஆகிய மூவரும் மொட்டை மாடியில் மது அருந்திவிட்டு அங்கேயே துாங்கினர்.
மழை பெய்ததால் இரண்டாம் தளம் வந்தனர். மழை விட்டதால் மீண்டும் மொட்டை மாடிக்கு சென்று துாங்கினர். நேற்று அதிகாலை 5:00 மணிக்கு பார்த்தபோது டம்பாரு மாஜி, 18; கட்டடத்தின் கீழே விழுந்து இறந்து கிடந்தது தெரியவந்தது.
இது குறித்து வணிக வளாக கான்ட்ரக்டர் கொடுத்த புகாரில் பேரில் கோட்டக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து டம்பாரு மாஜி மாடியில் இருந்துதான் விழுந்தாரா அல்லது வேறு காரணமா என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

