/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
முக்கியத்துவம் இல்லை: உடன் பிறப்புகள் 'அப்செட்'
/
முக்கியத்துவம் இல்லை: உடன் பிறப்புகள் 'அப்செட்'
ADDED : டிச 09, 2025 03:59 AM
கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக தி.மு.க., நிர்வாகிகள் பூத் கமிட்டி அமைப்பது, ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை, 'எனது ஓட்டுச்சாவடி; வெற்றி ஓட்டுச்சாவடி' எஸ்.ஐ.ஆர்., வாக்காளர் சேர்க்கை என ஓய்வின்றி வேலை செய்து வருகின்றனர்.
இந்த வேலை தேர்தல் வரை நீடிக்கும். இவர்களை உற்சாகத்துடன் தேர்தல் வரை கொண்டு செல்வதற்காக துணை முதல்வருடன் 'செல்பி' எடுக்கும் நிகழ்ச்சியே செஞ்சியில் ஆலோசனைக் கூட்டம் என்ற பெயரில் நடந்தது.
இந்த கூட்டத்தில் ஒன்றிய சேர்மன்கள், செயலாளர்கள், அணி அமைப்பாளர்கள் இதுவரை செய்துள்ள பணிக்கு பாராட்டும் அங்கீகாரமும் கிடைக்கும் என எதிர்பார்த்தனர். ஆனால், இவர்களும் பத்தோடு ஒன்றாக செல்பி மட்டும் எடுத்துக் கொண்டு அனுப்பி வைக்கப்பட்டனர்.
செஞ்சி தொகுதிக்கு சம்மந்தம் இல்லாதவர்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் கூட கட்சிக்காக நேர்மையாய் உழைத்த தங்களுக்கு கொடுக்கப்படவில்லை என செஞ்சி தொகுதியைச் சேர்ந்த சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பலரும் புலம்பி வருகின்றனர்.

