/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மயிலம் திருமடத்தில் நுால் வெளியீட்டு விழா
/
மயிலம் திருமடத்தில் நுால் வெளியீட்டு விழா
ADDED : ஜன 03, 2024 12:06 AM

மயிலம் : மயிலம் ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் திருமடத்தில் நுால் வெளியீட்டு விழா நடந்தது.
விழாவிற்கு, மயிலம் ஆதீனம் 20ம் பட்ட சுவாமிகள் தலைமை தாங்கினார். ஆன்மிக எழுத்தாளர் மணிவண்ணன் எழுதிய 'ஸ்ரீ சுப்ரமணிய சதகம்' என்னும் நுாலை ஆதீனம் வெளியிட்டு பேசினார்.
நுாலின் முதல் பிரதியை முன்னாள் முதல்வர் முருகசாமி பெற்றுக் கொண்டு நுால் குறித்து ஆய்வுரை வழங்கினார். மயிலம் தமிழ்க்கல்லுாரி முதல்வர் திருநாவுக்கரசு, நல்லாசிரியர் பூங்குழலி பெருமாள் வாழ்த்திப் பேசினர். நுால் ஆசிரியர் மணிவண்ணன் ஏற்புரையாற்றினார்.
புதுச்சேரி கவிஞர்கள் ஆதிகேசவன், வேணுகோபால், சச்சிதானந்தம், விசாலாட்சி மதிப்புரை வழங்கினர். கல்லுாரி உதவி பேராசிரியர்கள் கிராம மக்கள், மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர். உதவி பேராசிரியர் சதீஷ் நன்றி கூறினார்.