/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மொபைல் மூலம் முன் பதிவு செய்ய எண்... அறிமுகம்; செஞ்சி மார்க்கெட் கமிட்டியில் புது முயற்சி
/
மொபைல் மூலம் முன் பதிவு செய்ய எண்... அறிமுகம்; செஞ்சி மார்க்கெட் கமிட்டியில் புது முயற்சி
மொபைல் மூலம் முன் பதிவு செய்ய எண்... அறிமுகம்; செஞ்சி மார்க்கெட் கமிட்டியில் புது முயற்சி
மொபைல் மூலம் முன் பதிவு செய்ய எண்... அறிமுகம்; செஞ்சி மார்க்கெட் கமிட்டியில் புது முயற்சி
ADDED : ஜன 30, 2024 06:28 AM

செஞ்சி : செஞ்சி மார்க்கெட் கமிட்டியில் நெல் மூட்டைகள் அதிகளவில் வந்ததால் இரண்டு நாட்களுக்கு நெல் கொண்டுவர வேண்டாம் என மார்க்கெட் கமிட்டி நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர். முன் பதிவு செய்ய மொபைல் எண்ணும் அறிவிக்கப்பட்டுள்ளது.
செஞ்சி மார்க்கெட் கமிட்டியில் கடந்த 22ம் தேதி ஒரே நாளில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் விற்பனைக்கு வந்தன.
மூட்டைகளை இறக்கி வைக்க இடமில்லாததால் 28ம் தேதி மாலை வரை நெல் கொண்டு வர வேண்டாம் என மார்க்கெட் கமிட்டி நிர்வாகத்தினர் அறிவித்திருந்தனர்.
இந்த அறிவிப்பிற்குப் பிறகு நேற்று முன்தினம் மாலை முதல் மீண்டும் விவசாயிகள் நெல் கொண்டு வந்தனர். நேற்று காலை வரை 32 ஆயிரம் நெல் மூட்டைகள் வந்தன. இதில் 501 விவசாயிகளின் 14 ஆயிரம் நெல் மூட்டைகளுக்கு நேற்று லாட் வழங்கினர்.
இந்த மூட்டைகள் எடை போட்டு இடத்தை காலி செய்யும் பணி இன்று மதியம் வரை நீடிக்கும். மீதம் உள்ள 17 ஆயிரம் நெல் மூட்டைகளுக்கு நாளை 31ம் தேதி லாட் வழங்கி ஏலம் நடத்த உள்ளனர்.
இதனால் இன்றும், நாளையும் புதிதாக விவசாயிகள் நெல் கொண்டு வரவேண்டாம் என மார்க்கெட் கமிட்டி கண்காணிப்பாளர் வினோத்குமார் அறிவித்துள்ளார். 1ம் தேதி ஏலத்தில் கலந்து கொள்ள நாளை 31ம் தேதி மாலை 3:00 மணிக்கு பிறகு விவசாயிகள் நெல் கொண்டு வரலாம் என இந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.
நேற்று காலை அதிக அளவில் நெல் மூட்டைகள் குவிந்ததால் செஞ்சி மார்க்கெட் கமிட்டி எதிரே காலை 9:35 மணிவரை போக்குவரத்து நெரிசல் இருந்தது.
தினமலர் செய்தி எதிரொலி
விவசாயிகள் நெல் கொண்டு வந்து இரண்டு முதல் மூன்று நாட்கள் வரை அவதிப்படுவதைத் தடுக்க மொபைல் போன்கள் மூலம் முன்பதிவு செய்யும் முறையை அறிமுகம் செய்ய வேண்டும் என கடந்த 24ம் தேதி 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.
இதையடுத்து நேற்று மார்க்கெட் கமிட்டி நிர்வாகத்தினர் விவசாயிகள் முன்பதிவு செய்ய 89259 02918 என்ற மொபைல் எண்ணை அறிவித்துள்ளனர். இனி இந்த எண்ணில் தொடர்பு கொண்டு விவசாயிகள் முன்பதிவு செய்து நெல் கொண்டு வரலாம்.