/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
செஞ்சி அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் ஸ்டிரைக்
/
செஞ்சி அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் ஸ்டிரைக்
ADDED : அக் 01, 2024 07:13 AM
செஞ்சி: செஞ்சி அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
செஞ்சி அரசு மருத்துமனை குறித்து சமூக வளைதளங்களில் வெளியான புகார் குறித்து விசாரணை நடத்த திண்டிவனம் அரசு மருத்துமனை தலைமை மருத்துவர் சாந்தகுமாரி நேற்று காலை செஞ்சி அரசு மருத்துவமனைக்கு வந்தார்.
தலைமை, மருத்துவர், மருந்தாளுனர் மற்றும் செவிலியர்களை விசாரணைக்காக அழைத்தார்.
அப்போது செவிலியர்கள், விசாரணை அழைப்பை எழுத்து பூர்வமாக தராமல் ஒரு நாள் முன்னதாக இரவு 9:00 மணிக்கு பிறகு வாட்ஸ் ஆப் மூலம் தெரிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று காலை 10:00 மணிக்கு திடீரென வேலை நிறுத்தம் செய்தனர்.
தலைமை மருத்துவர் பாலகோபால், செவிலியர்களிடம் பேச்சு வார்த்தை நடத்திய போதும், செவிலியர்கள் விசாரணைக்கு வர மறுத்து விட்டு வேலை நிறுத்த போராட்டத்தை தொடர்ந்தனர்.
பொதுமக்களில் சிலர் செவிலியர்களை பணிக்கு திரும்பும் படி கேட்டு கொண்டனர்.
இதையடுத்து 11:00 மணிக்கு பணிக்கு திரும்பினர். இதனால் மருத்துமனையில் பரபரப்பு நிலவியது.