sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

ஊட்டச்சத்தை வழங்கும் பழச்செடி தொகுப்புகள்... விநியோகம்; வீடு, நிலங்களில் வளர்க்க மானியத்தில் வழங்கல்

/

ஊட்டச்சத்தை வழங்கும் பழச்செடி தொகுப்புகள்... விநியோகம்; வீடு, நிலங்களில் வளர்க்க மானியத்தில் வழங்கல்

ஊட்டச்சத்தை வழங்கும் பழச்செடி தொகுப்புகள்... விநியோகம்; வீடு, நிலங்களில் வளர்க்க மானியத்தில் வழங்கல்

ஊட்டச்சத்தை வழங்கும் பழச்செடி தொகுப்புகள்... விநியோகம்; வீடு, நிலங்களில் வளர்க்க மானியத்தில் வழங்கல்


ADDED : நவ 21, 2024 12:34 AM

Google News

ADDED : நவ 21, 2024 12:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில், ஊட்டச்சத்து உணவு உற்பத்தியில் தன்னிறைவு மேம்படுத்தும் வகையில், வீடுகள், நிலங்களில் வளர்ப்பதற்காக 50 சதவீதம் மானியத்தில் பழச்செடி தொகுப்புகள், தோட்டக்கலைத் துறை மூலம் வழங்கப்படுகிறது.

தமிழக மக்கள் அனைவரும் ஊட்டச்சத்து மிக்க பழங்களை உட்கொள்ள வேண்டும் என்ற உயரிய கொள்கையுடன், தமிழக அரசு சார்பில் பழச்செடி தொகுப்புகள், தோட்டக்கலைத்துறையின் மூலம் 75 சதவீதம் மானியத்தில் வழங்கப்பட உள்ளது.

தற்போது, இந்த திட்டத்திற்காக, பழச்செடி தொகுப்புகள் வழங்கும் பணிகள், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் நோக்கம், மக்கள் அனைவரும் ஊட்டச்சத்து குறைபாடின்றி ஆரோக்கியத்துடன் இருக்கவும் மற்றும் நோய் எதிர்ப்பு திறனுடன் இருக்க வேண்டும் என்பதாகும்.

இத்திட்டத்திற்காக, உணவில் வைட்டமின்கள் மற்றும், தாது உப்புகள் அதிகம் காணப்படும் கொய்யா, நெல்லி, சீத்தா, எலுமிச்சசை மற்றும் மா போன்ற 5 வகை பழச்செடிகள் வளர்ப்பதற்காக, விழுப்புரம் மாவட்ட மக்களுக்கு 2,79,80 தொகுப்புகள் ரூ.41,97 லட்சம் நிதியில் செடிகள் வழங்கப்பட்டுள்ளது.

பொதுமக்களிடையே இத்திட்டம் ஒரு சிறப்பு திட்டமாகவே வரவேற்கப்படுகிளது. பொதுமக்களின் அன்றாட ஊட்டச்சத்து தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இத்திட்டம் அமையும். இந்த ஊட்டச்சத்து தொகுப்பு அடங்கிய செடிகளை, பொது மக்கள் தங்கள் வீடுகளில் வளர்ப்பதன் மூலம் அன்றாடம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்கும். அதோடு, வீடுகளில் இயற்கை முறையில் செடிகள் வளர்ப்பதால் பூச்சிகள் கொல்லிகள், ரசாயனங்கள் பயன்படுத்தாத நச்சுத்தன்மை இல்லாத, ஆராக்கியமான பழங்களை அறுவடை செய்து சாப்பிட முடியும்.

வீடுகளில் அமைக்கப்பட்ட தோட்டத்தில், பயிர் செய்யுபோது நம்மனதிற்கும் அமைதியும், உடலுக்கு உடற்பயிற்சியாகவும் அமைகிறது.இத்திட்டத்தை விவசாயிகள் மட்டுமின்றி, அனைத்து பொதுமக்களும் பயன்படுத்திக்கொள்ளலாம்.ஒரு குடும்பத்திற்கு, அதிகபட்சமாக ஒரு பழச்செடி தொகுப்பு வழங்கப்படும். 50 சதவீதம் பங்குத்தொகை கொடுத்து அதனை பெற்றுக்கொள்ளலாம்.

இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர், குடும்ப அட்டை நகல் அல்லது ஆதார் நகலை தங்களது வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி வாங்கி பயன்பெறலாம். tnhorticulture.tn.gov.in என்ற தோட்டக்கலைத்துறை இணையதளத்திலும், உழவர் செயலிலும் பதிவுசெய்து வாங்கி பயன்பெறலாம்.

மேலும் விவரங்களுக்கு வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்புகொள்ளலாம் என்று, விழுப்புரம் மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குநர் அன்பழகன் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us