/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சத்துணவு ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
/
சத்துணவு ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ADDED : நவ 20, 2024 04:53 AM
திண்டிவனம் : திண்டிவனத்தில் சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தின் ஒலக்கூர்,வானுார், மரக்காணம், மயிலம் கிளை சார்பில் நேற்று காலை திண்டிவனம் தாலுகா அலுவலகம் எதிரில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் நாகராஜன் தலைமை தாங்கினார். மாநில துணைத் தலைவர் தியாகராஜன், மாநில நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி, ஜெயக்குமார், அபராஜிதன், ஆனந்தன் மற்றும் நிர்வாகிகள் வேம்பு, சரோஜா உட்பட பலர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில், குறைந்த பட்ச ஓய்வூதியம் 6,750 ரூபாய் வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டது.