/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சத்துணவு ஊழியர்கள் நுாதன போராட்டம்
/
சத்துணவு ஊழியர்கள் நுாதன போராட்டம்
ADDED : பிப் 18, 2026 04:52 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர், 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தட்டை கரண்டியால் தட்டி ஒலி எழுப்பி நுாதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் நகராட்சி திடலில் நடந்த போராட்டத்திற்கு மாநில ஒருங்கிணைப்பாளர் மணிக்கண்ணன் தலைமை தாங்கினார்.
இதில், சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். கால பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தட்டை கரண்டியால் தட்டி நுாதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

