ADDED : பிப் 14, 2026 03:52 AM
அ நிறம் | அளவு
விழுப்புரம்: தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர், காலமுறை ஊதியம், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பாரி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் நகராட்சி திடலில் நேற்று நடந்த ஒப்பாரி போராட்டத்திற்கு மாநில தலைவர் ஜெயக்குமாரி தலைமை தாங்கினார். மாநில ஒருங்கிணைப்பாளர் மணிக்கண்ணன், மாவட்ட தலைவர் மலர், செயலாளர் சந்திரா, பொருளாளர் சங்கீதா உட்பட பலர் பங்கேற்றனர்.
