ADDED : பிப் 05, 2026 06:19 AM

விழுப்புரம்: விழுப்புரம் கலெக்டர் பெருந்திட்ட வளாகம் முன்பு, தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர் சங்க கூட்டமைப்பு சார்பில், நேற்று காலை 11.30 மணிக்கு, 2வது நாளாக திருச்சி நெடுஞ்சாலையில் மறியல் போராட்டம் நடந்தது.
முன்னதாக நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் நாகராஜன் தலைமை தாங்கினார்.
ஒருங்கிணைப்பாளர் மணிக்கண்ணன் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகள் வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
இதில் காலமுறை ஊதியம், காலி பணியிடங்களை நிரப்புதல், பதவி உயர்வு உட்பட பல கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
பாதுகாப்பு பணியிலிருந்த விழுப்புரம் மேற்கு இன்ஸ்பெக்டர் கல்பனா தலைமையிலான போலீசார் மறியல் செய்த 48 பேரை கைது செய்து, வாகனத்தில் ஏற்றி சென்றனர்.
இதனால், திருச்சி நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
