/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கொடி கம்பங்கள் அகற்றம் அதிகாரிகள் அதிரடி
/
கொடி கம்பங்கள் அகற்றம் அதிகாரிகள் அதிரடி
ADDED : மார் 19, 2024 05:34 AM

மரக்காணம்: மரக்காணம் அடுத்த கீழ்புத்துப்பட்டு கிராமத்தில் பொது இடங்களில் வைக்கப்பட்ட கட்சிக் கொடி கம்பங்கள் மாவட்ட தேர்தல் அதிகாரி முன்னிலையில் அகற்றப்பட்டது.
லோக்சபா தேர்தலையொட்டி, மாவட்டத்தில் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமுலில் உள்ளது. இதனால் பொது இடத்தில் வைக்கப்பட்டுள்ள கட்சிக் கொடி கம்பங்கள், பேனர், விளம்பரங்களை அகற்ற மாவட்ட தேர்தல் அதிகாரி கலெக்டர் பழனி உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
மரக்காணம் ஒன்றியத்தில் பல இடங்களில் வருவாய்த் துறையினர் கொடிகம்பங்களை அகற்றாமல் உள்ளனர்.
இந்நிலையில் நேற்று மரக்காணம் அடுத்த கீழ்புத்துப்பட்டு கிராமம் இ.சி.ஆரில் பொது இடங்களில் வைக்கப்பட்டிருந்த கட்சி சார்ந்த கொடி கம்பங்கள் அகற்றும் பணியினை மாவட்ட தேர்தல் அலுவலர் பழனி நேரில் பார்வையிட்டு, கள ஆய்வு செய்தார். மரக்காணம் தாசில்தார் பாலமுருகன் உடனிருந்தார்.

