sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

இன்று முதல் வேட்பு மனுக்கள் பெற அதிகாரிகள் தயார்! கலெக்டர் அலுவலகத்தில் ஏற்பாடுகள் தீவிரம்

/

இன்று முதல் வேட்பு மனுக்கள் பெற அதிகாரிகள் தயார்! கலெக்டர் அலுவலகத்தில் ஏற்பாடுகள் தீவிரம்

இன்று முதல் வேட்பு மனுக்கள் பெற அதிகாரிகள் தயார்! கலெக்டர் அலுவலகத்தில் ஏற்பாடுகள் தீவிரம்

இன்று முதல் வேட்பு மனுக்கள் பெற அதிகாரிகள் தயார்! கலெக்டர் அலுவலகத்தில் ஏற்பாடுகள் தீவிரம்


ADDED : மார் 19, 2024 10:52 PM

Google News

ADDED : மார் 19, 2024 10:52 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : விழுப்புரம் (தனி) தொகுதிக்கான வேட்பு மனு தாக்கல், விழுப்புரம் கலெக்டர் அலுவலக தேர்தல் அலுவலகத்தில் இன்று முதல் துவங்குகிறது. அதற்கான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில், லோக்சபா தேர்தலுக்கான நன்னடத்தை விதிகள் 16ம் தேதி மாலை முதல் அமலுக்கு வந்துள்ளது. மாவட்ட தேர்தல் அதிகாரி கலெக்டர் பழனி தலைமையில், தேர்தலுக்கான பணிகளை, தேர்தல் துறையினர் மேற்கொண்டுள்ளனர்.

வேட்பு மனு தாக்கல் இன்று 20ம் தேதி துவங்குகிறது. விழுப்புரம் கலெக்டர் அலுவலக முதல் தளத்தில், தொகுதிக்கான தேர்தல் அலுவலகம் தொடங்கப்பட்டுள்ளது. விழுப்புரம், விக்கிரவாண்டி, திண்டிவனம், வானுார், திருக்கோவிலுார், உளுந்துார்பேட்டை ஆகிய 6 சட்டசபை தொகுதிகள், விழுப்புரம் (தனி) லோக்சபா தொகுதியில் அடங்குகிறது.

விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் கலெக்டரிடமும், ஆர்.டி.ஓ., அலுவலகம் மற்றும் திண்டிவனம் சப் கலெக்டர் அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களிடமும் வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்யலாம்.

வரும் ௨௭ம் தேதி வரை காலை 11:00 மணி முதல் பிற்பகல் 3:00 மணி வரை மனுக்கள் பெறப்படும். இதற்காக, தேர்தல் அலுவலகத்தில் இருந்து, 100 மீட்டர் தொலைவில் கண்காணிப்பு எல்லைக் கோடுகள் நேற்று மாலை அமைக்கப்பட்டது.

இப்பகுதியில், போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு மனு தாக்கல் செய்ய வரும் வேட்பாளர்களுடன் வருபவர்கள் எல்லைக் கேட்டுக்கு அப்பால் நிறுத்தப்பட்டு, வேட்பாளர் மற்றும் அவர்களது பிரதிநிதிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். வாகனங்கள் கலெக்டர் அலுவலக வாயில் பகுதியிலேயே நிறுத்தப்படும் என தேர்தல் துறையினர் தெரிவித்தனர்.

விழுப்புரம் லோக்சபா தேர்தல் பணியில் 12 ஆயிரத்து 95 அரசு அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். பதற்றமான ஓட்டுச்சாவடிகள் 113 கண்டறியப்பட்டுள்ளது. வெப் கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. 136 நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த தேர்தலில் 16 லட்சத்து 69 ஆயிரத்து 577 பேர் ஓட்டளிக்க உள்ளனர். தேர்தலின் போது பயன்படுத்த பேலட் யூனிட் 4,168ம், கன்ட்ரோல் யூனிட் 2,614ம், வி.வி.பேட் 2,861ம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us