UPDATED : ஜூன் 18, 2026 02:55 PM
ADDED : ஜூன் 18, 2026 02:50 PM

திண்டிவனம்: திண்டிவனத்தில் புதிய பஸ் நிலையத்திற்கு பஸ்கள் செல்லாதது குறித்த வந்த புகாரின் பேரில், டி.எஸ்.பி., மற்றும் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் ஆய்வு மேற்கொண்டனர்.
திண்டிவனம் - சென்னை சாலையில் 27.51 கோடி ரூபாய் செலவில் புதியதாக கட்டபட்ட பஸ் நிலையம் கடந்த பிப்ரவரி 2ம் தேதி திறக்கப்பட்டது. ஆனால், இதுவரை புதிய பஸ் நிலையத்திற்கு அரசு மற்றும் தனியார் பஸ் டிரைவர்கள் செல்லாமல், திண்டிவனம் மேம்பாலத்தின் கீழ் பயணிகளை ஏற்றியும், இறக்கியும் செல்கின்றனர்.
இதுகுறித்து நகர மன்ற தலைவர் நிர்மலா கவுன்சிலர்களுடன் சென்று, கலெக்டர் ேஷக் அப்துல் ரஹ்மானை சந்தித்து புகார் மனு கொடுத்தார்.
கலெக்டர் உத்தரவின் பேரில், திண்டிவனம் டவுன் டி.எஸ்.பி., பிரகாஷ், வட்டார போக்குவரத்து ஆய்வாளர் முருகேசன் தலைமையில் நேற்று காலை 10:00 மணியளவில் திண்டிவனம் மேம்பாலத்தின் கீழ், புதிய பஸ் நிலையத்திற்கு பஸ்கள் சென்று வருகிறதா என்று விசாரணை நடத்தி, அனைத்து பஸ்களும் புதிய பஸ் நிலையத்திற்கு செல்லாமல் வந்தால், அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்தனர்.
மேலும் ஆய்வின்போது, புதிய பஸ் நிலையத்திற்கு வராமல் சென்றது தொடர்பாக 20 அரசு மற்றும் தனியார் பஸ்களுக்கு அபராதம் விதித்தனர்.
