/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சிறுமியை கர்ப்பமாக்கிய முதியவர் போக்சோவில் கைது
/
சிறுமியை கர்ப்பமாக்கிய முதியவர் போக்சோவில் கைது
ADDED : செப் 25, 2024 06:32 AM
செஞ்சி : சிறுமியை கர்ப்பமாக்கிய 60 வயது முதியவரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
விழுப்புரம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 9ம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமி, தந்தை இறந்ததால், உறவினர் வீட்டில் தங்கி படித்து வந்தார்.
அதே பகுதியை சேர்ந்தவர் பழனி, 60; விவசாயி. இவர், கடந்த ஆண்டு ஜூன் மாதம் சிறுமிக்கு பிஸ்கெட், கூல்டிரிங்ஸ் மற்றும் பணம் கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், சமீபத்தில் சிறுமியின் உடல்நிலை பாதிக்கப்பட்டதால், அவரது குடும்பத்தினர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதித்ததில், சிறுமி 8 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில், செஞ்சி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிந்து, பழனியை நேற்று கைது செய்தனர்.
திண்டிவனம்
திண்டிவனம் அடுத்த ஆட்சிப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னதம்பி என்கிற முருகானந்தம், 38; இவர், கடந்த 23ம் தேதி, பிளஸ் 2 படித்து வரும் 16 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
இதுகுறித்த புகாரின் பேரில் முருகானந்தம் மீது, திண்டிவனம் அனைத்து மகளிர் போலீசார் 'போக்சோ' சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.