/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சுற்றுலா பஸ் மோதியதில் முதியவர் பலி
/
சுற்றுலா பஸ் மோதியதில் முதியவர் பலி
ADDED : ஜன 04, 2024 03:37 AM
விழுப்புரம்; cவிழுப்புரத்தில் சுற்றுலா பஸ் மோதியதில் சைக்கிளில் சென்ற முதியவர் இறந்தார்.
விழுப்புரம் அடுத்த அயினம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் குப்பன், 73; இவர், நேற்று முன்தினம் மாலை விழுப்புரம் நோக்கி சைக்கிளில் சென்றார். அப்போது, முத்தாம்பாளையம் பைபாஸ் சாலையின் குறுக்கே அவர் சைக்கிளில் கடக்க முயன்றபோது, திண்டுக்கல் மாவட்டம் மரவத்தன்பட்டி கிராமத்தை சேர்ந்த முனியாண்டி மகன் ஆனந்தகுமார், 29; என்பவர் ஓட்டி வந்த சுற்றுலா பஸ் மோதியதில், பலத்த காயமடைந்த குப்பன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
விழுப்புரம் தாலுகா போலீசார் உடலை கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.