ADDED : டிச 23, 2024 04:21 AM
அ நிறம் | அளவு
விழுப்புரம் : வீட்டிலிருந்து வெளியே சென்ற முதியவர் காணாமல் போனார்.
விழுப்புரம் அடுத்த அய்யங்கோவில்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமணன், 84; வயது முதிர்வு காரணமாக ஞாபக மறதியால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில், கடந்த 20ம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை.
பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், அவரது மகன் சுப்புராயன் அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
