ADDED : ஏப் 08, 2025 04:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம்: திண்டிவனம் அருகே விவசாய கிணற்றில் முதியவர் இறந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டிவனம் அருகே மானூர் கோபாலபுரம் சுப்ரமணியன், 73;விவசாயி. நேற்று முன்தினம் மாலை, ஆட்சிப்பாக்கத்தில் உள்ள தனது விவசாய நிலத்தில் வேலையாட்களுடன்விவசாய பணிகள் செய்து விட்டு அங்குள்ள விவசாயகிணற்றின் குளித்துள்ளார்.
நீண்ட நேரமாகியும் முதியவர் வெளியே வராதாதல், ஒலக்கூர் போலீஸ நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். திண்டிவனம் தீயணைப்புத்துறையினர் கிணற்றில் இறங்கி தேடிய போது, முதியவர் கிணற்று சேற்றில் சிக்கி இறந்தது தெரியவந்தது.ஒலக்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.