ADDED : மார் 18, 2024 03:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அருகே சாலையைக் கடக்க முயன்ற மூதாட்டி, கார் மோதி இறந்தார்.
விக்கிரவாண்டி அடுத்த கப்பியாம்புலியூரைச் சேர்ந்தவர் வைரமுத்து மனைவி ராஜேஸ்வரி, 80; கூலித் தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் மாலை 7:00 மணியளவில் சாலையைக் கடக்க முயன்றார்.
அப்போது சென்னையிலிருந்து கும்பகோணம் நோக்கிச் சென்ற கார் ராஜேஸ்வரி மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயமடைந்த ராஜேஸ்வரி சம்பவ இடத்திலேயே இறந்தார்.
புகாரின் பேரில், விக்கிரவாண்டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

