ADDED : செப் 22, 2024 02:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வானுார்: ஆரோவில் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி மூதாட்டி இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஆரோவில் அடுத்த இரும்பையைச் சேர்ந்தவர் ரங்கநாதன் மனைவி பச்சையம்மாள், 75; இவர் நேற்று இரவு 7:00 மணிக்கு புதுச்சேரி - திண்டிவனம் பைபாசில் நடந்து சென்றார்.
இடையஞ்சாவடி குறுக்கு சாலையில் சென்றபோது, அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில், சம்பவ இடத்திலேயே பச்சையம்மாள் இறந்தார்.
இதுகுறித்து ஆரோவில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.