/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மூதாட்டி காதை அறுத்து கம்மல் திருட்டு
/
மூதாட்டி காதை அறுத்து கம்மல் திருட்டு
ADDED : டிச 01, 2024 04:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவலுார்பேட்டை : வளத்தி அருகே வீட்டிலிருந்த மூதாட்டியின் காதை அறுத்து கம்மல், மாட்டல் திருடிய நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வளத்தி அடுத்த கஞ்சமலைபுரவடை கிராமத்தைச் சேர்ந்த வேடியப்பன் மனைவி சாரதா, 80; இவர், தனது மகன் சேகர் வீட்டில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு, 9:00 மணியளவில் வெளியே சென்ற சேகர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, சாரதாவின் காதை அறுத்து அவரது 10 கிராம் கம்மல், மாட்டலை மர்ம நபர் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில், வளத்தி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.