ADDED : ஜூலை 31, 2026 03:46 AM

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அடுத்த வி.சாத்தனுாரிலிருந்து முண் டியம்பாக்கம் சர்க்கரை ஆலைக்கு நேற்று அதிகாலை 12:30 மணிக்கு டிப்பரில் கரும்பு ஏற்றிக் கொண்டு டிராக்டர் சென்றது.
இந்த டிராக்டரை வி.சாத்தனுாரை சேர்ந்த மணிகண்டன், 34 ; என்பவர் ஓட்டி சென்றார் .முண்டியம்பாக்கம் பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது, சென்னையிலிருந்து திருச்சி நோக்கி வந்த, ஆம்னி பஸ் டிராக்டர் டிப்பர் மீது மோதியதில் கரும்பு லோடு சாலையில் சரிந்தது.
இதனால் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதித்தது. விக்கிரவாண்டி போலீசார் மற்றும் டோல்ப்ளாசா ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று இடர்பாடுகளை அகற்றி சீரமைத்தனர். வழுதாவூர் கூட்ரோட்டிலிருந்து வாகனங்களை, திருச்சி நோக்கி சர்வீஸ் சாலையில் போலீசார் திருப்பி விட்டனர்.
விபத்தில் காயமடைந்த டிரைவர் மணிகண்டனை சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
விபத்து காரணமாக அப்பகுதியில் நேற்று அதிகாலை 1.௦௦ மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
