/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அரசு பஸ் கண்ணாடி உடைப்பு விக்கிரவாண்டியில் ஒருவர் கைது
/
அரசு பஸ் கண்ணாடி உடைப்பு விக்கிரவாண்டியில் ஒருவர் கைது
அரசு பஸ் கண்ணாடி உடைப்பு விக்கிரவாண்டியில் ஒருவர் கைது
அரசு பஸ் கண்ணாடி உடைப்பு விக்கிரவாண்டியில் ஒருவர் கைது
ADDED : ஆக 04, 2025 11:04 PM

விக்கிரவாண்டி: மயிலத்திலிருந்து விழுப்புரம் நோக்கி நேற்று காலை 8:15 மணியளவில் அரசு டவுன் பஸ் சென்றது. பஸ்சை சே.கொத்தமங்கலத்தைச் சேர்ந்த செல்வம், 28; என்பவர் ஓட்டினார். ரெட்டிகுப்பத்தைச் சேர்ந்த கண்டக்டர் ராமதாஸ், 45: பணியில் இருந்தார்.
விக்கிரவாண்டியிலேயே பஸ்சில் அதிக அளவு பயணிகள் ஏறிய நிலையில், பாப்பனப்பட்டு பஸ் நிறுத்தத்தில் பஸ் நிற்காமல் சென்றது.
இதனால், அங்கு நின்றிருந்த பள்ளி மாணவர்கள் பஸ்சை நிறுத்துமாறு கூச்சலிட்டனர்.
அங்கிருந்த பெற்றோர் திரளாக கூடி பஸ்சை நிறுத்தச் செய்து, டிரைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பாப்பனப்பட்டை சேர்ந்த கலைமணி, 24; என்பவர் பஸ் முன்பக்க கண்ணாடி மீது கல் வீசி தாக்கினர். இதனால் பஸ் கண்ணாடி உடைந்தது.
இதுகுறித்து டிரைவர் செல்வம் கொடுத்த புகாரின் பேரில், கலைமணி மீது வழக்குப் பதிந்து அவரை விக்கிரவாண்டி போலீசார் கைது செய்தனர்.