/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
குடும்பத் தகராறில் ஒருவர் தற்கொலை
/
குடும்பத் தகராறில் ஒருவர் தற்கொலை
ADDED : பிப் 21, 2024 11:25 PM

கண்டாச்சிபுரம் : கண்டாச்சிபுரம் அருகே குடும்பத் தகராறு காரணமாக கணவர் தற்கொலை செய்துகொண்டார்.
கண்டாச்சிபுரம் அடுத்த ஆலம்பாடி புதுார் பகுதியைச சேர்ந்த கட்டையன் மகன் பிரகாஷ்,30; இவருக்கும் ஆலம்பாடி அடுத்த நாச்சிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த குமார் என்பவரின் மகள் சிவமதிக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடந்தது.
இவர்களுக்கு குழந்தை இல்லை எனத் தெரிகிறது.கடந்த 6 மாதங்களுக்கு முன்பாக கணவனைப் பிரிந்த சிவமதி சென்னையில் பணிபுரிந்து வருகிறார். இதனால் விரக்தி அடைந்த பிரகாஷ் நேற்று நாச்சிக்குப்பத்தில் உள்ள சிவமதியின் நிலத்தில் உள்ள மாமரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த கண்டாச்சிபுரம் போலீசார் பிரகாஷின் உடலக் கைப்பற்றி முண்டியம்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். சம்பவம் குறித்த விசாரித்து வருகின்றனர்.