/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கல்லுாரி பஸ் மீது கார் மோதியதில் ஒருவர் காயம்
/
கல்லுாரி பஸ் மீது கார் மோதியதில் ஒருவர் காயம்
ADDED : நவ 20, 2024 05:32 AM

வானுார் : ஆரோவில் அருகே புறவழிச்சாலையில் எதிர் திசையில் பாய்ந்த கார், தனியார் கல்லுாரி பஸ் மோதி விபக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்தார்.
திருவண்ணாமலையைச் சேர்ந்தவர் ஆதிமூலம். இவர் நேற்று மாலை புதுச்சேரியில் இருந்து கிரிட்டா காரில் திருவண்ணாமலை சென்று கொண்டிருந்தார். 6:00 மணியளவில் புதுச்சேரி - திண்டிவனம் புறவழிச் சாலையில், இடையஞ்சாவடி குதிரைப் பண்ணை செல்லும் வளைவு அருகே வந்தபோது, திடீரென பைக்கில் வந்த இருவர் சாலையை கடக்க முயன்றனர்.
அவர்கள் மீது மோதாமல் இருக்க திலிபன், காரை வலது புறமாக திருப்பினார். அதில், கட்டுப்பாட்டை இழந்த கார், சென்டர் மீடியன் மீது மோதி எதிர் திசையில் பாய்ந்து, எதிரே வந்த தனியார் கல்லுாரி பஸ் மீது மோதியது.
இந்த விபத்தில் காரில் ஏர் பலுான்கள் விரிந்ததால் திலிபன் காயமின்றியும், ஆதிமூலம் சிறு காயத்துடனும் உயிர் தப்பினர். ஆதிமூலம் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
விபத்து குறித்து ஆரோவில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.