/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கிரேன் மோதி ஒருவர் பலி இருவர் படுகாயம்
/
கிரேன் மோதி ஒருவர் பலி இருவர் படுகாயம்
ADDED : ஜன 04, 2024 03:46 AM
அவலுார்பேட்டை: மேல்மலையனுார் அடுத்த விநாயகபுரம் கிராமத்தை சேர்ந்த ராஜி,55; விவசாயி, இவரது உறவினர்களான மணி,58; அயோத்தி ராமன் 49, ஆகியோருடன் செல்லபிராட்டியிலிருந்து பைக்கில் நேற்று முன்தினம் இரவு 7:00, மணிக்கு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர்.
வளத்தி அடுத்த கஞ்சமலை புரவடை கூட்ரோடு அருகே பைக் நின்ற போது, பின்னால் வந்த கிரேன் பைக்கின் மீது மோதியது. இதில் பைக்கில் பின்னால் அமர்ந்து வந்த ராஜி படுகாயமடைந்து அதே இடத்தில் இறந்தார்.
காயமடைந்த பைக் ஓட்டிச்சென்ற அயோத்திராமன் ,மணி ஆகியோரை செஞ்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். புகாரின் பேரில் வளத்தி போலீசார் கிரேன் ஆப்ரேட்டர் கொடுக்கன் குப்பத்தை சேர்ந்த கார்த்திக் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.