/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
இணைய வழி ஆவணப்பதிவு விழிப்புணர்வு முகாம்
/
இணைய வழி ஆவணப்பதிவு விழிப்புணர்வு முகாம்
ADDED : மார் 11, 2026 04:13 AM
திண்டிவனம்: திண்டிவனத்தில் பத்திரப் பதிவுத்துறை சார்பில் பொதுமக்களுக்கு இணைய வழி ஆவணப்பதிவு விழிப்புணர்வு முகாம் நடந்தது.
கடலுார் மண்டலத்திற்குட்பட்ட திண்டிவனம் பதிவு மாவட்ட இணைய வழி பதிவுத்துறையின் 10 சேவைகளை பொதுமக்கள் எளிதாகவும் வெளிப்படையாகவும் தெரிந்து கொள்ளும் வகையில், விழிப்புணர்வு முகாம் நடந்தது. திண்டிவனம் நிர்வாக மாவட்ட பதிவாளர் கல்பனா தலைமை தாங்கினார்.
முகாமில ''https://tnreginet.gov.in/portal பயன்படுத்தி புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் மனைப்பிரிவுகளின் முதல் விற்பனை ஆவணம், உரிமை வைப்பு ஆவணம் உள்ளிட்ட 10 வகை ஆவணங்களுக்கு பொதுமக்கள் சார்பதிவாளர் அலுவலகம் செல்லாமலேயே இணைய வழி மூலம் பதிவு மேற்கொள்ளலாம். இதன் மூலம் அனைத்து வகையான ஆவணங்களையும் இணையவழி உள்ளீடு செய்து ஆதார் எண் சரிபார்ப்பு மூலம் மின்னணு கையொப்பமிட்டு அலுவலகத்திற்கு நேரில் வந்து காகிதமில்லா ஆவணப்பதிவினை மேற்கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
முகாமில், பொதுமக்கள் வீட்டில் இருந்தபடியே இணையதளத்தின் மூலம் மனு சமர்ப்பித்து கட்டணம் செலுத்திய ஓரிரு விநாடிகளில் சான்றளிக்கப்பட்ட நகல் பெறலாம். சார்பதிவாளர் அலுவலகத்திற்கு வராமலேயே இணையதளத்தின் மூலம் மனு சமர்ப்பித்து கட்டணம் செலுத்தி வில்லங்க சான்றிதழ் பெறலாம். பொதுமக்கள் வீட்டில் இருந்தபடியே திருமண பதிவிற்கு இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட பல சேவைகளை திரை விளக்கத்தின் மூலம் காண்பிக்கப்பட்டது.
முகாமில், சார் பதிவாளர்கள் அலுவலக பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.

